வட கொரியாவில் நடக்கும் முகாம்களில் மக்கள் எந்தளவுக்கு பயங்கர கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்நாட்டின் முன்னாள் பெண் அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார்.

Lim Hye-jin என்னும் பெண் வட கொரியாவில் உள்ள முகாம்களில் சில வருடங்களுக்கு முன்னர் காவல் அதிகாரியாக வேலை பார்த்துள்ளார்.

ஆண் அதிகாரிகள் முன்னால் நிர்வாண அணிவகுப்பில் கலந்து கொள்ள சொன்னதால் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

வட கொரியா முகாம்களில் நடந்து வரும் கொடுமைகளை Lim முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு முறை இரண்டு பேர் முகாமிலிருந்து தப்பி சென்று விட்டர்கள்.

அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அந்த இருவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லபட்டார்கள்.

பின்னர் தப்பியோடிய இருவரும் சீனாவில் பிடிப்பட்டு மறுபடியும் இங்கு கொண்டு வரப்பட்டார்கள்.

இருவரையும் அங்குள்ள மக்கள் மத்தியில் வைத்து அதிகாரிகள் தலையை துண்டித்து கொலை செய்தார்கள்.

இந்த கொடூரத்தை அருகிலிருந்து பார்த்த என்னால் சில நாட்களுக்கு உணவே சாப்பிட முடியவில்லை என மிரட்சியுடன் Lim கூறியுள்ளார்.

இங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என உணர்த்தவே பொது வெளியில் இருவரும் கொல்லப்பட்டனர்.

வட கொரியாவின் முகாம் அதிகாரிகள் அங்குள்ளவர்களை மனிதர்களாகவே மதிக்க மாட்டர்கள். மிருகங்களை போல தான் நடத்துவார்கள் என கூறும் Lim, ஒரு முறை இளம் பெண்ணை நிர்வாணமாக்கி தீயிட்டு கொளுத்தினார்கள் என தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் தொழிலாளர் முகாமில் கிட்டதட்ட 200,000 மக்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

அங்கு நான் வேலை செய்யும் போது முகாம்களில் உள்ளவர்களிடம் பரிதாபப் பட கூடாது என என்னை மூளை சலவை செய்து விடுவார்கள்.

வட கொரியாவின் தலைவராக கிம் ஜாங் பொறுப்பேற்ற பின்னர் தான் இந்த கொடுமைகள் அதிகரித்துள்ளதாக Lim தெரிவித்துள்ளார்.

கற்களை உடைக்கும் வேலையில் முகாம் ஆட்கள் ஒரு சமயம் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த எரிவாயு வெடித்ததில் 300 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

முகாமில் இருக்கும் பெண்களை ஆண் அதிகாரிகள் வலுகட்டாயமாக கற்பழிப்பார்கள்.

அப்படி கற்பழிக்கபட்ட பெண்கள் கர்ப்பமானால் அதை கலைத்து விட வேண்டும்.

அதையும் மீறி குழந்தை பிறந்தால் அந்த குழந்தைகளை அதிகாரிகள் உயிரோடு எரித்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

முகாமில் உள்ள கைதிகள் வாரம் எழு நாட்களும் வேலை செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்க வேண்டும்.

அங்கு இறந்த பின்னர் கூட மரியாதை கிடையாது என கூறும் Lim, பட்டினியாலும், கொடுமையாலும், நோய்களாலும் கொத்து கொத்துகாக இறப்பவர்களை அப்படியே வைத்து கொளுத்தி விடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

சாப்பிடுவதற்கு சோளம் மற்றும் உப்பு தரப்படும். ஆனால் வேலை செய்யும் போது யாராவது சாப்பிட்டால் கொடூரமாக அடிப்பது அல்லது இருட்டறையில் வைத்து பூட்டி வைப்பது என கொடுமைகளும் நடக்கும்.

ஒரு முறை உளவு பார்த்ததாக Jung Gwang என்னும் நபர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையில் இருந்தார்.

அவரை சிறை அதிகாரிகள் படுத்திய கொடுமையில் Jung நரகத்தில் இருப்பது போல உணர்ந்து பெரிதும் சிரமபட்டார்.

இந்த முகாமில் நான்கு வருடங்களாக வேலை செய்த Ahn Myung-Chul கூறுகையில், இங்கு இறந்தவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.

இங்கு கொடுமையை அனுபவிப்பதற்கு இறப்பதே மேல் என அவர் கூறியுள்ளார்.

தலைமையிடம் நல்ல பெயர் எடுத்து பரிசுகள் வாங்க இங்குள்ள அதிகாரி ஒரு முறை தப்பித்து போகாத 5 பேரை தப்பித்து போக நினைத்தார்கள் என பொய்யாக கூறி அவரை பிடித்து கொலை செய்தார் என Ahn கூறுகிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் வட கொரியாவில் மனித தன்மை மீறபடுவதாக ஐக்கிய நாடுகள் குற்றம் கண்டனம் தெரிவித்தது.

ஆனாலும் சரியான வீடியோ ஆதாரம் இல்லாததால் அதை ஏதும் செய்ய முடியவில்லை.