Connect with us

Cinemapettai

கபில் தேவ் போல நடராஜா ஷாட் ஆடிய ரன்வீர் சிங்.. வைரல் போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கபில் தேவ் போல நடராஜா ஷாட் ஆடிய ரன்வீர் சிங்.. வைரல் போட்டோ உள்ளே

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து லாபம் பார்ப்பது பாலிவுட்டிற்கு ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே தோனி, மேரிகோம், சச்சின் டெண்டுல்கர் என லிஸ்ட் மிக பெரியது தான். அந்த லிஸ்டில் கபில் தேவ் அவர்களின் பயோபிக் தான் 83 படம்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இவர் தலைமையில் தான் முதன் முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. இதனை மையப்படுத்தி கபீர்கான் படத்தை இயக்குகிறார்.

Ranveer Singh as Kapil

இந்நிலையில் நேற்று கபிலாக ரன்வீர் நடராஜா ஷாட் என போட்டோவை பகிர அது இணையத்தில் வைரலானது. இந்த போட்டோ 70000 லைக்குகள் பெற்றது. நடராஜரின் நடன போஸ் போல இருப்பதால்; நம் லோக்கல் கிரிக்கெட்டில் பெயர் வந்தது இந்த ஷாட்டிற்கு.

சினிமா ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த போட்டோவில் உள்ள நுணுக்கத்தை பாராட்டி வருகின்றனர்.

வேறு சிலரோ கபில் (haryana hurricane) அவர்களின் பௌலிங் அக்ஷன் போட்டோ ரிலீஸ் செய்யுங்க என கேட்டு வருகின்றனர்.

இந்த போட்டோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top