அப்படியே போட்டியை கண்முன் காட்டிய கபீர் கான்.. கொஞ்ச நஞ்ச அவமானமா

வரலாற்று நிகழ்வுகள் அல்லாது உண்மை சம்பவத்தை ஒரு படமாக எடுப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்த வகையில் பல படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அதில் பல படங்கள் வெற்றியும் கண்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது 83 படம் வெளியாகியுள்ளது.

1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை எப்படி கைப்பற்றியது என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் கபீர்கான் இயக்கியுள்ளார். முதலில் காதாப்பாத்திர தேர்விற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும். ஆம் அன்றைய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் கனகட்சிதமாக பொருந்தி இருந்தார்.

அதேபோல் படத்தின் காட்சிகளும் மிக அருமையாக உள்ளன. 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை பார்க்காதவர்களுக்காக இப்படம் உருவாகியுள்ளது போல. அந்த காட்சிகளை அப்படியே தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்துள்ளனர்.

83
83

கதைப்படி 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்கிறது. அங்கு, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறி விடும் என பலர் கூற, எதிர்பாராத விதமாக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் செல்கிறது.

இறுதிபோட்டிக்கு செல்ல இந்திய அணி பல அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது. இதைக் கடந்து இறுதியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி எப்படி உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பதுதான் 83 படத்தின் கதை. இதை விட அழகாக வேறு யாராலும் இந்த படத்தை எடுத்திருக்க முடியாது.

கபில்தேவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரன்வீர் சிங் உடல் மொழி, விளையாட்டு, சோகம், அவமானம் என அனைத்திலும் கபில் தேவாகவே வாழ்ந்துள்ளார். அதேபோல் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.

மொத்தத்தில் 83 படம் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். அனைவரும் படத்திற்கு பாஸ் மார்க் தான் வழங்கியுள்ளார்கள். நிச்சயம் இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்