Tamil Cinema News | சினிமா செய்திகள்
விராட் கோலியைப் பின்பற்றும் ரன்வீர் சிங்.. தீபிகா ஹேப்பி அண்ணாச்சி

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடியைப் பின்பற்றி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி இத்தாலியில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் ஆகிய வரலாற்றுப் படங்களில் நடித்த ஜோடி ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். பாலிவுட்டின் பிரபலமான இந்த ஜோடி, இணைந்து நடித்தாலே அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்ற மைண்ட் செட் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே வளர்ந்துவிட்டது. ரீல் லஃபைப் போலவே நிஜ வாழ்விலும் அவர்கள் காதல் வானில் சிறகடித்துப் பறப்பதாக ஒரு தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டில் வலம் வந்துகொண்டிருந்தது.
அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர்கள் இருவரும் ஒன்றாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தனர். ஷூட்டிங் தவிர்த்த நேரங்களில் ஒன்றாகவே அவர்கள் அதிக பொழுதைக் கழிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தகவல் வெளியாகி வந்தது.
இந்தநிலையில், ரன்வீர் – தீபிகா ஜோடி இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், அதற்காக நவம்பர் 16ம் தேதியைக் குறித்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், வேலைப்பளு மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நவம்பர் 10ம் தேதியே திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருக்கிறார்கள்.
அவர்கள் திருமணம் விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடியின் திருமணத்தை போலவே இத்தாலியில் நடத்தத் திட்டமிடப்படிருக்கிறது. அதேபோல், சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத் துறை தூதராக ரன்வீர் சிங் இருப்பதால், அங்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாமா என்ற யோசனையும் ரன்வீர் சிங்கிற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை தீபிகா இத்தாலிக்கு அடிக்கடி விசிட் செய்வது உண்டு. அவர் தங்குவது உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் இத்தாலி அரசு சார்பில் செய்துகொடுப்பார்களாம். அதனால், இத்தாலியே பெஸ்ட் என தீபிகாவின் குடும்பத்தினர் டிக் அடித்திருக்கிறார்கள்.
திருமணம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தனது திரைத்துறை நண்பர்களுக்கு ஹிண்ட் கொடுத்து வருகிறாராம் ரன்வீர். திருமணம் மிகவும் பிரமாண்டமாகவும், ஆடம்பரமாகவும் திட்டமிடப்பட உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இவர்களின் திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். வாழ்த்துகள் ரன்வீர் – தீபிகா.
