Connect with us
Cinemapettai

Cinemapettai

karthik

Tamil Cinema News | சினிமா செய்திகள்

7 வருடம் கழித்து ரீமேக்காகும் கார்த்திக்கின் சூப்பர் ஹிட் படம்.. வேற லெவலில் வெளிவந்த அப்டேட்

புரட்சிகர பல்வேறு விடயங்களை எளிதாக போட்டு உடைக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முதல் படமான அட்டகத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் கூட்டணி அமைத்த படம் மெட்ராஸ்.

வடசென்னை வாழ்வையும் ஒரு சுவர் விளம்பரத்திற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் அழகாகவும அழுத்தமாகவும் காட்டியிருக்கும் ரஞ்சித் அடுத்தடுத்து கபாலி, காலா என பிசியாகிவிடவே மெட்ராஸ் படத்திற்கான தெலுங்கு டப் கிடப்பில் போடப்பட்டது.

தெலுங்கு திரைகளில் ஓரளவு பிரபலமான கார்த்தி அடுத்தடுத்த படங்களால் இன்னும் பிரபலத்தை அதிகப்படுத்தி இருந்தார். இப்போதைய சூழலில் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி பா.ரஞ்சித்திற்கு தெலுங்கில் மெட்ராஸ் படத்தை டப் செய்வதற்கான வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது.

அதன்படி படம் செப்டம்பரில் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியுள்ளது. 2014-ல் தமிழ்நாடு திரையரங்குகளை நிறைத்த மெட்ராஸ் ஏழு வருடங்கள் கழித்து 2021-ல் தெலுங்கானா மற்றும் ஆந்திரா திரைகளை நிறைக்கவிருக்கிறது.

madras-Catherine

madras-Catherine

கார்த்தி கேத்ரின் தெரசா கலையரசன் உட்பட இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருந்த இப்படம் 2014-ல் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top