pa-ranjith
pa-ranjith

ஒரு காலத்தில் ஜாதி சண்டை இருந்தது இப்போதும் சில இடங்களில் மட்டும் இருக்கிறது. அதனை சரிசெய்ய சினிமாவை பயன்படுத்துவது சரிதான் ஆனால் ஜாதியை வைத்து பெயர் எடுக்க சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது. சென்னையை பொருத்தவரையில் கல்லூரி, பள்ளிக்கூடம் என எதிலும் பழகும் நண்பர்கள் கண்டிப்பாக அவர்களுக்குள் உள்ள ஜாதிகள் தெரியவே தெரியாது அனைத்து ஜாதியினரும் ஜாதி பார்க்காமல் தான் பழகி வந்தனர் ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

devar-magan-movie
devar-magan-movie

முன்னர் வெளிவந்த தேவர்மகன் படத்தை எடுத்தவரும் தேவர் அல்ல. கமலஹாசன் பிராமணர். அவர் தேவர் ஜாதியாக இருந்தால் கூட தவறு என்று ஏற்றுக்கொள்ளலாம். அந்த படம் எடுத்தது யாரின் தவறு? சரி அதுவும் 26 வருடங்கள் ஆகிவிட்டது அதனை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் ரஞ்சித் இப்பொழுது தொடர்கிறார். ஆண்ட பரம்பரை என குறிப்பிட்டு பொதுவாக அனைத்து சாதி மக்களையும் புண்படுத்தி வருகிறார். அனைத்து சாதியினரும் ஆள வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். உண்மையில் இன்றும் நம் அனைவருக்கும் ஆண்ட பரம்பரையாக இருப்பது பிராமணர்கள் மட்டும்தான். அவர்கள்தான் அனைத்து துறையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்வதில் பிரயோஜனமும் இல்லை நாம் தான் முன்னேற வேண்டும்.

அதிகம் படித்தவை:  டீசரில் ரஞ்சித் நீக்க சொன்ன காட்சியை வலுகட்டாயமாக வைக்க சொன்ன ரஜினிகாந்த்

நாம் அனைவரும் தமிழ் மக்கள் தமிழர்கள் என்பது பா.ரஞ்சித் அவர்களுக்கு புரியவே இல்லை. ரஞ்சித் தன் இன மக்களை அவரே தாழ்த்தி வருகிறார் என்பது போல் தோன்றுகிறது. தாழ்த்தப்பட்டவருக்கு வாய்ப்பில்லை என்று கூறி வருகிறார் அப்படி என்றால் ரஞ்சித் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவு முன்னேறி இருப்பாரா? நமக்கு ஒரு அம்பேத்கர் கிடைத்திருப்பாரா? இன்னும் பல பேர் இருக்கிறார்கள் என யோசித்துப் பார்க்க வேண்டும்.

அட்டகத்தியில் தொடங்கி பரியேறும் பெருமாள் வரை அனைத்து படங்களிலும் சாதியை காண்பித்துள்ளார். தன் இன மக்களுக்காக போராடுவது தவறில்லை ஆனால் அது தவறான வழியில் செல்கிறது. தன் இன மக்களை உயர்த்தி அவர்களின் பெருமைகளையும், பெருமை சேர்க்கும் வகையிலும் படம் எடுத்தால் கண்டிப்பாக அந்த மக்களும் அதனை பார்த்து உயர்வார்கள். பாசிட்டிவ் எனர்ஜி என்பது திரையிலும் இருக்கவேண்டும்.

அதிகம் படித்தவை:  பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் சூப்பர்ஸ்டாரா?

சமீபத்தில் ஒரு whatsapp குரூப்பில் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் சினிமாவில் ஆரம்பித்து சாதிச் சண்டையில் முடிந்தது. அதுவரையில் அவர்கள் என்ன என்ன ஜாதி என்பது யாருக்குமே தெரியாது. அப்படி பழகி இருந்தவர்கள் இப்பொழுது சாதியை பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு காரணம் யார்? ஏதோ ஒரு சில கிராமங்களில் நடந்து கொண்டிருந்த சாதி மோதல்கள் சென்னையிலும் வருகிறது. இதெல்லாம் ரஞ்சித் புரிந்து செயல்பட வேண்டும் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் நாம் அனைவரும் நண்பர்கள். மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பாகுபாடு வேண்டாம். நாம் தமிழர்கள் மட்டுமே.