fbpx
Connect with us

Cinemapettai

ஊர்க்கு ஊர் ஜாதி இருக்கு! ஆவேசத்தில் கத்திய ரஞ்சித்

News | செய்திகள்

ஊர்க்கு ஊர் ஜாதி இருக்கு! ஆவேசத்தில் கத்திய ரஞ்சித்

சமீபத்தில் நீட் தேர்வின் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணம் நாட்டையே கொந்தளிக்க செய்து வருகிறது. இது தொடர்பாக எல்லா இடங்களிலும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இயக்குனர்கள் நடத்திய போராட்டத்தில் அமீர், பா. ரஞ்சித், ராம் போன்றோர் கலந்துகொண்டனர். அப்போது ‘சாதி பாகுபாடில்லாது தமிழர்களாய் ஒன்றுபட்டு இதை எதிர்க்க வேண்டும்’ என்று அமீர் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ‘ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ஜாதி இருக்கு, நான் இன்னும் சேரிலதான் இருக்கேன், தலித் தலித்னு இன்னும் ஒதுக்கி வைச்சுட்டு தான் இருக்காங்க, அதை மறைச்சு ஜாதி இல்லை, தமிழ், தமிழன் என்று பூசி மொழுகி பேச வேண்டாம், ஜாதி வேறுபாடு எல்லா இடத்துலையும் இருக்கு.

pa-ranjithஅனிதா விசயத்துல அதை மறைச்சு பேச வேண்டிய அவசியமில்லை, ஜாதி இல்லாத இடமே இல்லை, எல்லா இடத்துலையும் அது இருக்கு, அதை கடந்து வந்துவிட்டோம், நாம மேல வந்துவிட்டோம்னு எல்லாம் பொய் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.’ என்று ஆவேசமாய் கோவப்பட்டு கத்தி பேசினார்.

பிறகு அவரை இயக்குனர் ராம் மற்றும் அமீர் சமாதானம் செய்து அமரவைத்தனர்.

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சாதி இருக்குனு கோவபடுறாரா? இருக்க கூடாதுன்னு கோவபடுறாரா? தெரியலையே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top