ரஞ்சித் மற்றும் அமீர் இருவரும் மிகப்பெரிய இயக்குனர்கள் சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோவில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காகக் கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் தமிழனாகச் சமத்துவம் அடைந்துள்ளோம் என்றார்.

அதிகம் படித்தவை:  கபாலிக்கு பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களை இயக்கம் ரஞ்சித்

அமீரின் இப்பேச்சுக்கு பா. இரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து மேடையிலேயே அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். அதன்பிறகு பா. இரஞ்சித் பேசியதாவது:

இன்னும் எத்தனை நாள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப் போகிறோம்? தமிழனாக இருந்து நான் சொல்கிறேன் – தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான். சாதியாகப் பிரிந்திருக்கும் வரை சாதியாகப் பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த் தேசியத்தைத் தொடமுடியாது.

அதிகம் படித்தவை:  கபாலி படத்தில் அதிரடி மாற்றம்? இயக்குனருக்கு ரஜினி உத்தரவு

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் சாதி உள்ளது. தமிழன் சாதியால் பிரிந்துள்ளான். ஒப்புக்கொள்ளுங்கள். அனிதாவின் மரணத்திலாவது நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.