Connect with us

Cinemapettai

துப்பறியும் ஆக்ஷன் திரில்லர் மர்தானி 2 ஹிந்தி பட திரைவிமர்சனம்

India | இந்தியா

துப்பறியும் ஆக்ஷன் திரில்லர் மர்தானி 2 ஹிந்தி பட திரைவிமர்சனம்

ராணி முகர்ஜி 41 வயதாகிறது, எனினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் படங்களும் பாலிவுட்டில் ஹிட் அடித்து வருகிறது. கடந்த 2014 ல் மர்தானி என்ற படத்தில் ஷிவானி சிவாஜி ராய் ரோலில் நடித்தார். படமும் ஹிட். அப்படத்தின் இரண்டாம் பாகம் தான் வெளியாகி உள்ளது. சென்ற பார்ட்டில் குழந்தைகளை கடத்தும் கும்பலை துரத்தி பிடித்தார். இந்த பார்ட்டில் பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை வேட்டையாடுகிறார்.

கதை – ராஜஸ்தானில் போஸ்டிங்கில் இருக்கிறார் ராணி முகர்ஜி. அங்கு தசரா சமயத்தில் ஒரு பெண் கடத்தப்படுகிறாள்; சில நாட்கள் கழித்து கொடூரமாக அடித்து, கற்பழிக்கப்பட்ட நிலையில் அவள் உடல் கிடைக்கிறது. நம் ஹீரோயின் அவனை பிடிப்பேன் என ப்ரெஸ்ஸில் சவால் விட அவளையும் தொடருகிறான். ஒருபுறம் காண்ட்ராக்ட் கில்லர் ஆக; மறுபுறம் பெண்களை கடத்துபவனாக விஷால் ஜெத்தா மெர்சல் செய்கிறான். தீபவளிக்கு முன் ட்ரான்ஸபார் ஆக, அந்த லீவ் முடிந்து ராஜஸ்தான் விட்டு செல்லும் முன்பு எவ்வாறு அந்த கொடூர வில்லனை சூரசம்ஹாரம் செய்கிறார் என்பதே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல் – இன்று நாம் செய்தித்தாளில் டிவியில் பார்க்கும் நியூஸ் வைத்து கதையை ரெடி செய்துள்ளார் இயக்குனர் கோபி புத்திரன். படத்தின் கதையை வில்லன் தனது கொடூர ஸ்டைலில் சொல்வது போன்ற கோணத்தில் வைத்தது சிறப்பு. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருக்குமா ? என நாம் யோசிக்கும் நேரத்தில் அவனின் பேக் ஸ்டோரி சொல்லி நம்மை மிரள வைக்கிறார்.

ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் நம்மை சீட் நுணியில் அமர்ந்து பார்க்க வைக்கிறது ஆகமொத்தத்தில் படம் தரமான ஆக்ஷன் திரில்லர். சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங்- 3.5 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top