ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவலை தெரிந்துக்கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர். ஒருபக்கம் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் எனவும் இன்னொரு பக்கம் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய கூடாது எனவும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரண்டு முக்கிய தொலைகாட்சி ஆசிரியர்களை அப்போலோ வரும்படி அ.தி.மு.க தலைமை அழைத்திருக்கிறது. அதன்படி தந்தி தொலைகாட்சியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டவும் புதிய தலைமுறை தொலைகாட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வனும் நேற்று நள்ளிரவு அப்போலோ சென்றனர்.

அங்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முழு தகவல்களும் அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்கள் எனவும் செய்தி வந்துள்ளது..