Tamil Cinema News | சினிமா செய்திகள்
எல்லா புகழும் அஜித் அவர்களுக்கே.. வைரலாகுது டிவி பிரபலம் பதிவிட்ட ட்வீட்
நேர்கொண்ட பார்வை, பாலிவுட் படமான பிங்கின் அதிகாரபூர்வ ரிமேக். நாட்டிற்கு தேவையான மெஸேஜ் சொல்லும் கோர்ட் ட்ராமா படம். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தமிழில் ப்ளாக் பஸ்டர் படம். இப்படத்தில் அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் எதிர்தரப்பு வக்கீலாக டிவி நியூஸ் சேனல்களில் பிரபலமான ரங்கராஜ் பாண்டே நடித்திருப்பார். கோர்ட் விவாதத்தில் இவர் இடம்பெற்றது படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லன் நடிகருக்கான ரசிகர்களின் விருதை இவர் பெற்றுள்ளார். அதற்கு தான் தன் நன்றியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
13ஆவது ஆண்டாக நடந்த #edision_awards
இல், 2019ஆம் ஆண்டின் Best villain – Critics Award #நேர்கொண்டபார்வை படத்துக்காக வழங்கப்பட்டது. 2020இல் வாங்கிய முதல் விருது. திரைத்துறையில் முதல் விருதும் கூட. எல்லா புகழும் #HVinoth மற்றும் #Ajith க்கே… இன்னும் உழைப்பேன் 👍🙏 pic.twitter.com/ey34jL3B7G— Rangaraj Pandey (@RangarajPandeyR) January 13, 2020
