Connect with us
Cinemapettai

Cinemapettai

karthik-movie-new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நவரச நாயகனாக இருந்தாலும் போதைக்கு அடிமையான சோகம்! பகிரங்கமாக பேட்டி அளித்த பிரபலம்!

அப்போது இருந்த முன்னணி நடிகர்களில் சிலர் ஆள் அடையாளமே தெரியாமல் போய்விட்டனர். அந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்களில் முக்கியமான ஒருவர் தான் கார்த்திக்.

மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோரோடு முன்னணி நடிகராக கருதப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் நவரசத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றதால் ‘நவரச நாயகன்’ என்ற செல்லப் பெயரையும் பெற்றார்.

இந்த நிலையில் கார்த்திக் பற்றிய ரகசியத்தை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

அதாவது அந்தப் பேட்டியில் ரங்கநாதன், கார்த்திக்குக்கு குடி பழக்கம் அதிகமாக இருந்ததாகவும், அவுட்டோர் படபிடிப்புகளின் போது ரூம் கதவை மூடிவிட்டு எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் கார்த்திக் இருப்பார் என்றும், இதனால்தான் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கை அடி வாங்கியது என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சங்கிலி முருகன் இயக்கும் படங்களில் மட்டும் கார்த்திக் தவறாமல் கலந்து கொள்வார் என்றும், அதற்குக் காரணம் இயக்குனர் சங்கிலி முருகன் மீது கார்த்திக் வைத்திருந்த மரியாதையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

எனவே, ஒரு காலக்கட்டத்தில் ஃபேவரிட் ஹீரோவாக சுற்றித்திரிந்த கார்த்திக்குக்கு குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தடுமாற்றத்தை கேள்விப்பட்ட பலர், இந்தச் செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.

ranganathan

ranganathan

Continue Reading
To Top