ஜெர்மனியின் ஒரு மாநிலம் Saxony-Anhalt. இங்குள்ள ஒரு ஹோட்டலில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தங்கி இருந்தார் ஒரு இளம்பெண். பக்கத்து அறையில் ஒரு இளைஞர் தங்கி இருந்தார்.

இருவருக்கும் காதல் மலர்ந்தது. 3 நாட்கள் தொடர்ந்து இருவரும் ஒரே அறையில் தங்கினர். இரவு பகல் பாராமல் இன்பத்தில் திளைத்தனர். பின்னர் அந்த இளைஞர் அறையை காலி செய்து விட்டு புறப்பட்டார்.

அந்த பெண்ணும். இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. அந்த பெண் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விட்டார். ஆனால் குழந்தையின் தந்தை யார் என்று தெரியவில்லை.

காரணம் அவன் பற்றிய எந்த தகலும் இவளிடம் இல்லை. பெயர் மட்டும் தான் தெரியும். ஹோட்டலுக்கு சென்றாள். விசாரித்தாள். அந்த குறிப்பிட்ட தேதியில் இவர் சொன்ன பெயரில் 4 பேர் தங்கி இருந்தனர். அவர்களின் விபரங்களை தர முடியாது என்றது ஹோட்டல் நிர்வாகம்.

காரணம் இது அவர்களின் பிரைவேஸி என்றது. நீதிமன்றம் சென்றால். அங்கும் தனது கணவனின் பெயர் மட்டுமே தெரியும் என்று சொன்னாள். 4 பேரையும் விசாரியுங்கள் என்றாள். இதனை ஏற்க முடியாது என்று நீதிமன்றமும் கூறிவிட்டது.  இப்போது 7 வயது குழந்தையுடன்… கணவனின் பெயர் தெரியாமல்…