Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலர் முகத்தில் முழிக்க அவர் வீட்டு பக்கத்திலேயே 32 கோடிக்கு வீடு வாங்கிய வாரிசு நடிகை.. தூரத்திலிருந்து ரசிக்கிறாங்களாம்!
நடிகர் நடிகைகள் காதலிக்கும்போது வானத்திற்கு எல்லை இல்லை என்பது போல தங்களது காதலுக்கும் இல்லை என இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவார்கள்.
அதே காதல் நடுவில் கழண்டு விட்டால் இருவரையும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் காதலர்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்.
படப்பிடிப்புக்கு இடைப்பட்ட நேரங்களில் வெளிநாடு சென்று ஓய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பத்தாததுக்கு லிவிங் டுகெதர் வேற.
சொல்லவா வேணும். இருந்தாலும் தாங்கள் ஒரு கண்ணியமான காதலர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக தனது காதலர் ரன்வீர் கபூர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பக்கத்திலேயே 32 கோடிக்கு ஒரு வீடு வாங்கியுள்ளாராம் ஆலியா பட்.
அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசித்து வரும் ரன்பீர் கபூர் எழுந்ததும் தன்னுடைய முகத்தில்தான் முழிக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் அதே ஏழாவது மாடியில் உள்ள வீட்டை வாங்கியுள்ளாராம் அலியா பட்.
இருவரும் ஜன்னல் வழியே பிளையிங் கிஸ் கொடுத்துக் கொள்வதும், கண்களால் காதல் செய்வதும் என சினிமாவையே மிஞ்சிவிட்டார்களாம்.

ranbir-alia-butt-cinemapettai
