பெயரை மாற்ற சொல்லி வற்புறுத்தினாரா ரன்பீர்? ஆலியா பட் புது பெயர்தான் இப்ப ட்ரெண்டிங்

பிரபல இந்தி நடிகை ஆலியா பட் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பிரபல ஆடை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவரும் நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராஹா என்று அழகான ஒரு மகள் இருக்கிறார்.

பொதுவாகவே ரன்பீர் கபூர் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாவார். குறிப்பாக தீபிகா படுகோன், கத்ரீனா கைப் விவகாரத்தில் விமர்சனத்துக்குள்ளானவர், ஆலியாவை திருமணம் முடித்த பிறகும், அவரை மதிக்காமல், dominate செய்கிறார் போன்ற விமர்சனங்கள் அவ்வப்போது வருவதை பார்க்க முடியும்.

மேடை நாகரீகம் என்று ஒன்று இவருக்கு இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அனிமல் படம் மூலமாக தனது உண்மை முகத்தை காட்டினார் ரன்பீர் என்றும் பலர் பேசிக்கொண்டு வந்தனர்.

ஆனால், இதை எதையும் கண்டுக்காமல் இருக்கும் ரன்பீர் அடுத்தாக ராமாயண படத்தில் நடிக்கவிருப்பதனால், குடி மாமிசம் போன்ற பழக்கங்களை விட போவதாக சொன்னார். மேலும் தனது மகள், ராஹ வுக்காக சிகரெட் பழக்கத்தையும் விட்டுவிட்டதாக சொன்னார்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், தனது பெயரை ஆலியா பட் கபூர் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டதாக அறிவித்தார். நடிகை ஆலியா பட் தனது பெயரை மாற்றியுள்ள செய்தி மிகவும் வைரலாகி வருகிறது.

இத்தனை ஆண்டுகளாக ஆலியா பட் என்றிருந்த தனது பெயரை தற்போது அவர் மாற்றியுள்ளார். இதை தொடர்ந்து, ரன்பீர் வற்புறுத்தலின் பெயரில் ஆலியா பெயரை மாற்றியுள்ளார். ரன்பீர் ஒரு சிவப்பு கம்பளம் (red flag) என்று மீண்டும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -spot_img

Trending News