rana

ranaநடிகர் ராணா தற்போது இந்தியாவின் முதல் போர் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய படமொன்றில் இந்திய கடற்படை வீரராக நடித்துவருகிறார். கஸி எனும் பெயரில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்துக்காக இவர் தனது உடல் எடையை சற்று குறைத்திருந்தார்.

இந்நிலையில் பாகுபலி 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இவர் தற்போது தனது உடல் எடையை மீண்டும் அதிரடியாக ஏற்றி வருகிறார். இதற்காக தினமும் ஜிம்மே கதி என இருக்கிறாராம் ராணா.