பாகுபலி படத்தின் வில்லன் பாத்திரத்தில் நடித்து கலக்கிய ராணா நிஜத்திலும் வில்லன்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்தவர் ராணா டகுபதி. இந்த இரண்டு பாகங்களிலும் ஹீரோ பிரபாஸுக்கு இணையான வேடத்திலேயே ராணா நடித்தார். பல்லால தேவா பாத்திரத்தில் கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட வில்லனாக அசரடித்தவர்.

பாகுபலி 2 படத்தின் வெற்றி நாளுக்கு நாள் பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், ராணா தான் திரையில் மட்டும் பிரபாஸுக்கு வில்லன் அல்ல. நிஜத்திலும் வில்லன்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

தானும் பிரபாஸும் நேருக்கு நேர் புஜபலத்தை பரிசோதிப்பது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் வெள்ளித்திரையில் மட்டுமல்ல வெளியிலும் வில்லனாகவே இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி மிரட்டியுள்ளார் ராணா.