பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி உள்ளது.

இதில் ராணா, தனது காட்சிகளை முடிக்காமல் பாதியிலேயே அவர் ஹீரோவாக நடிக்கும் வேறொரு படத்தில் நடிக்கபோனதாக தகவல் வெளியானது. ஆனால் ராணா அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்படும் என தயாரிப்பாளர் தற்போது அறிவித்துள்ளார்.