‘ஹாத்தி மேரே சாத்தி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக போகிறதாம்.

 ஹாத்தி மேரே சாத்தி

1971 இல் ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் வெளிவந்த படம். சின்னப்ப தேவர் கதைக்கு, சலீம்- ஜாவேத் திரைக்கதையை வைத்து படத்தை இயக்கினார் திருமுருகம். படம் சூப்பர் ஹிட். மனிதனுக்கும் யானைக்கும் உள்ள உறவு, பாசம் என்று அந்தக்காலத்தில் வசூல் சாதனை படைத்த படம். பின்னர் மக்கள் திலகம் நடிப்பில் “நல்ல நேரம்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

அதிகம் படித்தவை:  ஜெய் - சுமார் மூஞ்சி குமார் இணைந்து நடிக்கும் "ஜருகண்டி" டீஸர் !

ராணா டகுபட்டி

இந்தப்படத்தின் ரீ- மேக்கில் தான் ராணா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என்று மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகுமாம்.

பிரபு சாலமன்

மைனா, கும்கி, கும்கி 2 இயக்குனர் பிரபு சாலமன் தான் படத்தை இயக்கப்போகிறார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்குமாம். படம் தீபாவளி ரிலீஸ் என்கிறார்கள். இப்படத்தை தயாரிக்க போவது ஈரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரினிட்டி பிக்ச்சர்ஸ்.

அதிகம் படித்தவை:  காட்ஜில்லா - கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் ட்ரைலர் !
Director Prabu Solomon at Kumki Shooting Spot

‘கும்கி-2’ படத்தை இயக்கும் வேலைகளில் பிசியாக உள்ளார். அதனை முடித்துவிட்டு  பிரபு சாலமன். பிரபு சாலமன் இயக்கும் இந்த படத்திலும் யானை கதாபாத்திரம் இடம் பெறுகிறது. எனினும் இந்த இரண்டு படங்களின் கதைகள் முற்றிலும் வித்தியாசமானவை தான்.