1971 இல் ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் வெளிவந்த படம். சின்னப்ப தேவர் கதைக்கு, சலீம்- ஜாவேத் திரைக்கதையை வைத்து படத்தை இயக்கினார் திருமுருகம். படம் சூப்பர் ஹிட். மனிதனுக்கும் யானைக்கும் உள்ள உறவு, பாசம் என்று அந்தக்காலத்தில் வசூல் சாதனை படைத்த படம். பின்னர் மக்கள் திலகம் நடிப்பில் “நல்ல நேரம்” என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

அதே பழைய படத்தின் ரீ- மேக்கில் ராணா தான் ஹீரோ. பிரபு சாலமன் இயக்குனர் என்ற அறிவிப்பு முன்னேரே வந்தது. இப்படம்  தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என்று மூன்று  மொழிகளில் ரெடியாகிறது, தீபாவளியன்று   ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை  ஈரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரினிட்டி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

புத்தாண்டு ஸ்பெஷல் ஆக இப்படத்தின் தனது கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் முதல் லுக் போஸ்டர் ஒன்றை ராணா தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Rana Dagubatti

பாகுபலி படத்தில் “பல்லதேவா” வாக வந்து கலக்கிய ராணாவுக்கு இப்படத்தில் “பன்தேவ்” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப வல்லுனர்களின் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.