Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராணா டகுபதியின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குனர்.. ட்விட்டரில் மோதிக்கொண்ட ஹீரோ – தயாரிப்பாளர்.. தொடங்கியது சர்ச்சை
தீபாவளி ஸ்பெஷலாக பல படக்குழுக்கள் தங்கள் அப்டேட்டை வெளியிட்டு வந்தனர்.
கே.ராஜராஜன் தயாரிப்பில் சத்ய சிவா (கழுகு படப்புகழ்) இயக்கத்தில் ராணா, ரெஜினா, காலி வெங்கட், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மடை திறந்து’. யுவன் இசை. சுமார் மூன்று வருடங்களாக இப்படம் தயாரிப்பில் உள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு ‘1945’ என தலைப்பிட்டனர். மேலும் தீபாவளியை முன்னிட்டு ‘1945’ பட பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்தனர்.
இதற்கு தான் ராணா “பண விஷயத்திலும், படத்தை முடிப்பதிலும் தவறிய ஒரு தயாரிப்பாளரின் முடிக்கப்படாத படம் இது. ஒரு வருடத்துக்கும் மேலாக அவர்களைச் சந்திக்கவில்லை. இன்னும் அதிக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக அவரது யோசனை இது. தயவுசெய்து இதை ஊக்குவிக்க வேண்டாம். நன்றி” என ஸ்டேட்டஸ் தட்டினார்.
தயாரிப்பாளர் ராஜராஜன், “ஒரு படம் நிறைவு பெற்றதா, இல்லையா என்று அந்தப் படத்தின் இயக்குநர்தான் முடிவு செய்யவேண்டும். படம் நிறைவு பெற்றதா, இல்லையா என ரசிகர்கள் முடிவு செய்யட்டும். கிட்டத்தட்ட 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்து, கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, நிறைவு பெறாத ஒரு படத்தை யாரும் வெளியிட மாட்டார்கள்.” என ராணாவின் ஸ்டேட்டஸுக்கு பதில் தட்டினார்.
The Director is the one who decides whether the film is complete or not.. Let the audience decide whether this film is complete or not. Almost 60 days of shoot and crores of money invested, nobody will release an unfinished movie.@Sathyasivadir A director decides the script. https://t.co/PadnjgKLcC
— Rajarajan.S.N (@Rajarajan7215) October 27, 2019
24 ஜனவரி 2020 இல் ரிலீசாகிறது இந்த சரித்திர பின்னணியில் ரெடியாகி உள்ள படம்.
I am happy that after three years my movie is completed and the first look is released today. The #1945 by Shivaakumaar alias Sathyashivaa
#1945 portrays the war of emotions between patriotism and love of an INA soldier. @kaaliactor @KProductions9 @thisisysr @Rajarajan7215 pic.twitter.com/5HZCoDwh2F
— Sathyasiva (@Sathyasivadir) October 27, 2019
எனினும் படம் தெலுங்கில் மட்டும் வெளியாகுமா ? தமிழ் பாதிப்பு என்னவாயிற்று போன்ற இந்தத் தகவலால் இல்லை.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
