ஹைதராபாத்: நடிகர் ராணா தன்னை பிரதர் என்று அழைப்பதாகவும், தானும் பதிலுக்கு அவரை பிரதர் என்று அழைப்பதாகவும் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர். பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் ராணா, பிரபாஸ் மற்றும் படம் பற்றி அனுஷ்கா பேட்டி அளித்துள்ளார்.

செக்ஸி

பிரபாஸ், ராணா ஆகிய இருவரில் யார் செக்ஸி என்று அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் பிரபாஸ் தான் என்று பதில் அளித்தார்.

ராணா

ராணா என்னை எப்பொழுதுமே பிரதர் என்று தான் அழைப்பார். பதிலுக்கு நானும் அவரை பிரதர் என்றே அழைப்பேன் என்று அனுஷ்கா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தேவசேனா

அமரேந்திர பாகுபலியின் காதலியாகவும், மகேந்திர பாகுபலியின் தாயாகவும் நடித்தது சவாலாக இருந்தது. இயக்குனர் ராஜமவுலி இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை என்கிறார் அனுஷ்கா.

பிரபாஸ்

அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

காதல்

அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.