தமிழில் அரசியலை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் ரொம்பவே அரிதாகிவிட்டன. அப்படியே படம் எடுத்தாலும், ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளாமல் மேம்போக்காக மட்டுமே அவர்களை பற்றி விமர்சித்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ராணா டகுபதி, தற்போது ஹீரோவாக நடித்துள்ள ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தில் சூடு பறக்கும் அரசியல் வசனங்கள் இருக்கும் என்பது படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.

ஆனால் தெலுங்கு அரசியல் பற்றியல்ல… தமிழக அரசியல் பற்றி… இந்தப்படத்தில் டீசரில், ராணாவை பார்த்து, நான் சி.எம் என்பதை மறந்துவிடாதே என்கிறது முதல்வர் கேரக்டர். அதற்கு ராணா ‘ஒரு நூறு எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ரெஸ்ஸார்ட்டுல உட்கார வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் ஆவேன் சி.எம்” என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கூத்தை நேரடியாகவே விமர்சிக்கிறார்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயமாக ராணா-காஜல் அகர்வால் ரொமான்ஸ் மாண்டேஜ் காட்சிகளில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என எம்.ஜி.ஆர் பாடலை ஒலிக்க விட்டிருப்பதுதான்.