திரையுலகை மிரட்டிய ரம்யா கிருஷ்ணனின் 5 கதாபாத்திரங்கள்.. அந்த ரோல் தான் டர்னிங் பாயிண்ட்

சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ, வெப் தொடர் என பல பரிமாணங்களில் பிஸியாக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய 51 வயதிலும் இளமையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத ஐந்து கதாபாத்திரங்களை பார்க்கலாம்.

லீலா: சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்தில் இயக்குனர் முன்னதாக லீலா கதாபாத்திரத்திற்கு நதியா, ரம்யா கிருஷ்ணன் இருவரையும் தேர்வு செய்திருந்தார். ஒரு சில காரணங்களால் நதியா நடிக்க முடியாமல் போக ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்புக்கொண்டு லீலா கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருந்தார்.

சிவகாமி தேவி: ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான படம் பாகுபலி. இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படத்தில் மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவருடைய திரை உலக வாழ்க்கையிலேயே மறக்க முடியாது கதாபாத்திரமாக ராஜமாதா சிவகாமி தேவி. இயக்குனர் முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியுள்ளார். ஸ்ரீதேவி அதிக சம்பளம் கேட்டதால் அதன் பின்பு ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்தனர்.

நீலாம்பரி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் இடம் பிடித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்ரனை தேர்வு செய்தார்கள். ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு கர்ஜிக்கும் குரலும், கவரும் பார்வையும் கொண்டு நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் பிரமிக்கச் செய்தார். இப்படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். இவருக்கு இந்த கதாபாத்திரம் தான் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேகி: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் மேகி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சிகரமான எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நக்மாவை தேர்வு செய்து இருந்தார்கள். அவர் உடல் எடை அதிகமாக இருப்பதால் பின்பு ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

அம்மன்: ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அம்மன். இப்படத்தில் சௌந்தர்யா, சுரேஷ், வடிவுகரசி என பலர் நடித்திருந்தார்கள். இதில் ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்