சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து நதியா விலகியுள்ளார். ரம்யாகிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

nadiya

தியாகராஜன் குமாரராஜா ஆரண்யகாண்டம் படத்தை தொடர்ந்து  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் ஆரம்பித்தார். இதற்க்கு அநீதிக் கதைகள் என்று முதலில்  பெயர்  வைக்கப்பட்டது. பின்னர் “சூப்பர் டீலக்ஸ்” என்று பெயர் மாற்றப்பட்டது.   யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, என்று பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.விநோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

vijay-sethupathy

விஜய் சேதுபதி

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். அவர் கதாபாத்திரத்தின் பெயர்  ‘ஷில்பா’: சூப்பர் டீலக்ஸ். இந்த கெட்-அப் போட்டோ வெளிவந்து நல்ல ரீச் ஆனது.

சமந்தா

அதன் பின்னர் சமந்தாவின் கதாபாத்திர பெயர் “வேம்பு” என்றும் அவரின் ரோல் பற்றிய விடியோவை வெளியிட்டார்கள்.

vembhu – samantha

SAMANTHA AS VEMBHU IN SUPER DELUXE – VIDEO

நதியா

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.வில்லி கேரக்டர் தான் என்று கூறப்பட்டதாம். ஓரிரு நாட்கள் படப்பிடிப்புக்கும் வந்துள்ளார். அதன் பிறகு அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

Ramya Krishnan

தற்பொழுது  அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். “படத்திலிருந்து விலகியது உண்மைதான் ஆனால் அதற்கான காரணத்தை பற்றி  சொல்ல முடியாது” என்று  நதியா கூறியுள்ளார்.

சினிமாபேட்டை கிசு கிசு

ஆரண்ய காண்டம் படம் பிடித்திருந்த காரணத்தால்  கதை கேட்காமல் நடிக்க  சம்மதித்தாராம்  நதியா. இந்நிலையில்  நடிக்க வந்த பிறகுதான் அது கொடூர வில்லி கேரக்டர் என்பது தெரிய வந்துள்ளதாம். அந்த கதாபாத்திர அமைப்பில் நடிக்க தனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், சுமுகமாக பேசி   படத்திலிருந்து விலகி விட்டாராம் நதியா.

Ramya Krishnan

படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன், மக்கள் செல்வனை மிரட்டும் வில்லியாக என்ன கெட்- அப்பில் வருவாரோ ?

வி ஆர் வைட்டிங் !