விவாகரத்து செய்தி குறித்து… ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்…

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து புகழ் பெற்ற நடிகை ரம்யாகிருஷ்ணன், ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களில் ராஜமாதா சிவகாமி கேரக்டராக வாழ்ந்தார்.

படையப்பா நீலாம்பரி, என்கிற முத்திரையை அழித்து அனைவர் மனதிலும் சுவாமியாக மட்டுமே பார்க்கப்பட்டுவருகிறார் ரம்யா கிருஷ்ணன் என்றால் அது மிகையாகாது.

 

 

இந்நிலையில், ஒருசில ஊடகங்களில், ரம்யா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதனால் தான் ஐதராபாத்தில் தங்காமல் சென்னையில் அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வதந்திகள் கிளம்பின. இந்த வதந்திகளுக்கு தற்போது ரம்யா கிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது..

நானும் எனது கணவரும் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். நான் ஒரு நடிகை, என் வாழ்வில் நான் விரும்பும் வரை தொடர்ந்து நடிக்க விரும்புவது எனது உரிமை. ஒரு நடிகையாக அது எனது கடமையும் கூட.

அதை என் கணவர் நன்கு புரிந்து கொண்டார். அவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்ற நிலையில் ஹைதராபாத்தில் தங்கி இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். நான் எனது நெடுந்தொடர் மற்றும் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் தடையின்றி கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் என் பெற்றோருடனும், மகனுடனும் வசிக்கிறேன். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சென்னையிலோ அல்லது ஹைதராபாத்திலோ சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருவருக்கும் ஒன்றாக விடுமுறை வந்தால் அப்போது குடும்பமாக எங்காவது டூர் செல்கிறோம். தேவைப்படும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்பில் தான் இருக்கிறோம்.இப்போது நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடும் வயதில் இல்லை. எங்கள் இருவருக்கும் எதிர்காலக் கடமைகள் இருக்கின்றன. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவரிடையே நல்ல புரிதல் இருக்கிறது.

நாங்கள் இருவருமே ஒருவரது வேலையை மற்றவர் புரிந்து கொண்டு மனமுவந்து விட்டுக் கொடுத்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது திருமண வாழ்க்கை முறிந்து விட்டது என்பதெல்லாம் வதந்தி என தெரிவித்துள்ளார்.

Comments

comments

More Cinema News: