Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் இடுப்ப யார் பார்த்தாரோ இல்லையோ சூர்யா பார்த்துட்டாரு.. அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்
தமிழ் சினிமாவில் அரசியலில் இருக்கும் ஊழலை தோலுரித்த படங்களில் ஜோக்கர் படம் முக்கியமான படம் என்றே கூறலாம். இந்த படத்தின் மூலம்தான் ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டார்.
இதற்கு பின்னர் ‘ஆண் தேவதை’ என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக நடித்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டது தற்போது வீணாகவில்லை ஏனென்றால் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரசிகர்கள் படத்தில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ரம்யா பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ‘டம்மி டப்பாசு’ என்ற படம் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது வரும் ஜூலையில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கூறியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே தெரியவரும்.
கவர்ச்சியைத் தாண்டி நடிப்புக்காக தன்னை அர்ப்பணிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமா எப்போதும் கை கொடுக்கும். அந்த வகையில் பல போராட்டங்களுக்குப் பின் ரம்யா பாண்டியன் படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
