Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவ கேடுகெட்ட வேலை செய்யறா.. பிக் பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியன் கோபப்படுத்தியது யார்?
அரக்கப் பறக்க ஆரம்பித்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் செல்வதால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.
முதலில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்து அதிலேயே ரசிகர்களுக்கு பெரிய உடன்பாடு இல்லை.
அதனைத் தொடர்ந்து டாஸ்க் என்றப் பெயரில் மிகவும் மட்டமான அனைவருக்கும் போரடிக்கும் விஷயங்களை கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி போடும் போது ஆரம்பத்தில் அனைவரும் டான்ஸ் ஆடுவது தான்.
அதற்காக மட்டுமே இளம் நடிகைகளை தேர்வு செய்து களமிறக்கியுள்ளது விஜய் டிவி.
இதில் ரசிகர்களுக்கு பெரிய ஆதரவாக இருப்பது ரம்யா பாண்டியன் தான். அவர்தான் டைட்டில் வின்னர் என்பது இப்போதே அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் சனம் செட்டி மீது செம கடுப்பில் இருப்பதாகவும், மொட்ட சுரேசை திட்டுவதற்கு வேண்டுமென்றே அர்ச்சனாவுடன் சேர்ந்து பிளான் போட்டது அம்பலமாகியுள்ளது.
இதனால் சனம் ஷெட்டியை பார்த்தாலே பிக்பாஸ் வீட்டில் கேவலமாக லுக் விடுகிறார் நம்ம ரம்யா பாண்டியன்.

bigg-boss-4
