Tamil Cinema News | சினிமா செய்திகள்
இடுப்பு மடிப்பை காட்டி என்ன பிரயோஜனம்.. கடைசியா அஞ்சுக்கும் பத்துக்கும் பேட்டி கொடுக்கும் ரம்யா பாண்டியன்!
இடுப்பழகி சிம்ரனுக்கு பிறகு இடுப்பால் மிகவும் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். அவருக்கு திடீரென அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமே எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.
அத்தனை ரசிகர்களையும் தன்னுடைய இடுப்பு மடிப்புகளில் எடுத்து சொருகிக் கொண்டார் ரம்யா பாண்டியன். ஆஹா, நம்மளும் பெரிய ஹீரோயினாக வலம் வந்து விடுவோம் என கொஞ்சம் மனக்கோட்டை கட்டி விட்டார் போல.
சினிமாவில் நடிக்க வருவார் என்று பார்த்தால் விஜய் டிவியில் சாப்பாடு செய்யச் சென்றுவிட்டார். எப்போதுமே விஜய் டிவியில் இருக்கும் ஒரு நல்ல பழக்கம், தங்களுடைய சேனலில் பிரபலமானவர்களை அவர்களுடனேயே வைத்துக் கொள்வார்கள்.
அது சாதாரணமாக போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு நடந்தால் பரவாயில்லை. ஆனால் சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வருவதற்காக இடுப்பு மடிப்பு எல்லாம் காட்டி பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு இந்த கதி.
கடைசியில் விஜய் டிவி அவரை டேக் ஓவர் செய்து விட்டது. சின்னத்திரையில் தொடர்ந்து பயணிப்பதால் பெரிய திரைக்கு வர வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சாதாரணமாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதற்கு எல்லாம் அமௌன்ட் கேட்கிறாராம். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் நான் பேட்டி கொடுக்கிறார் எனும் அளவுக்கு இறங்கிவிட்டார்.
