Connect with us
Cinemapettai

Cinemapettai

ramya-pandian

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கனவுக்கன்னி ரம்யா பாண்டியனின் முதல் வேலை இதுவா.. இது தெரிஞ்சிருந்தா ஏகப்பட்ட லோன் போட்டிருக்கலாமே!

சினிமா ரசிகர்களிடையே தற்போதைக்கு சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். நடித்த படங்கள் ஓடவில்லை என்றாலும் இவர் காட்டிய புகைப்படங்கள் கண்டபடி ஹிட்டடித்தது.

அதன் விளைவு தற்போது விஜய் டிவியின் மகாராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் டிவி ரம்யா பாண்டியனை தத்து எடுத்து வளர்த்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

வேண்டுமென்றே ரம்யா பாண்டியனை சுற்றி நான்கு பேரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பயன்படுத்தி, அவர்கள் ரம்யா பாண்டியனுக்கு ஜொள்ளு விடுவதை வைத்தே டிஆர்பி ஏற்றி வருகின்றனர்.

ஒரு சில புகைப்படங்களால் மிகப்பெரிய உயரத்தை அடைந்த ரம்யா பாண்டியன் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கிடைத்தது என்னமோ விஜய் டிவியில் சமையல் சோ தான்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். ஆனால் ரம்யா பாண்டியன் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் செய்த வேலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரம்யா பாண்டியன் முதல் முதலாக ரூபாய் 15,000 சம்பளத்தில் லோன் ஏஜன்ட் ஆக வேலை செய்தாராம். ஒவ்வொருவருக்கும் போன் பண்ணி லோன் வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்பதுதான் அவரின் வேலை.

Continue Reading
To Top