பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த பம்பர் லாட்டரி.. கிடைத்தது முன்னணி நடிகரின் பட வாய்ப்பு

ramya-pandian
ramya-pandian

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ரம்யா பாண்டியன் கலந்துகொண்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். விஜய் டிவியின் ஒரே குறிக்கோள், வரும் போட்டியாளர்கள் அனைவரும் ரம்யா பாண்டியனைப் பார்த்து வழிய வேண்டும் என்பதுதான்.

அவர்கள் நினைத்தது நடந்தது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பயன்படுத்தினால் நமக்கு நல்ல டிஆர்பி கிடைக்கும் என ரம்யா பாண்டியனை மூளைச்சலவை செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை.

ரம்யா பாண்டியன் என்ற பெயருடன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர் விஷ பாட்டில் என்ற பெயருடன் தான் வெளியில் வந்தார். இருந்தாலும் பெரிய அளவு அவரது இமேஜை பாதித்ததாக தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ramya-pandian-01
ramya-pandian-01

அப்படி ஒன்றுதான் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய பட வாய்ப்பு. அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கும் அந்த புதிய படத்தில் ரம்யா பாண்டியனுக்கு மிக முக்கிய வேடமாம். இதனை ரம்யா பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.

நல்லதோ கெட்டதோ நமக்கு பட வாய்ப்புகள் வந்தால் சரி என பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியனுக்கு பம்பர் லாட்டரி அடித்ததுபோல மேற்கொண்டு சில பட வாய்ப்புகள் அவர் வீட்டு கதவைத்தட்டி கொண்டிருக்கிறதாம்.

Advertisement Amazon Prime Banner