ரம்யா பாண்டியனை காதல் வலையில் வீழ்த்திய பிக் பாஸ் பிரபலம்.. இன்ஸ்டாவில் ஒரே லவ்ஸ் தானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் குறைந்தது விஜய் டிவி காதல் ஒரு ஜோடியாவது சேர்த்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் அப்படி ஒரு காதல் கதையை பார்க்க முடியவில்லை.

சிவானி பாலாஜி காதல் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் திடீரென பாலாஜி ஒரு கட்டத்தில் சிவானி மீது காதல் இல்லை எனவும் அப்படி காதல் வந்தால் சொல்கிறேன் எனவும் கூறியது அவருக்கே ஷாக் தான்.

அதனைத் தொடர்ந்து சிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாலாஜிக்கு ஆயா வேலை பாக்குறியா? என்று கேட்டதெல்லாம் உச்சகட்டம். ஆனால் சத்தமே இல்லாமல் காதலை வளர்த்து வந்துள்ளார்கள் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஜோடி.

பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும்தான் அந்தக் கூத்து என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோம்க்கு ரசிகர்கள் அனுப்ப அதனை காதல் ரசம் வழிய வழிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்.

ramya-pandian-som-love-cinemapettai
ramya-pandian-som-love-cinemapettai

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் ரம்யா பாண்டியனின் குடும்பத்தார் சோம் மாப்பிளையாக கிடைத்தால் நன்றாக இருக்கும் எனும் அளவுக்கு பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். அவர்கள் நினைத்தது தற்போது நடந்து விடும் போல.

ரம்யா பாண்டியனின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும்தானா அல்லது வெளியேயும் தொடருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். சினிமா வாய்ப்பு நிறைய கிடைத்தால் சோமுக்கு டாட்டா தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்