Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யா பாண்டியனுக்கு இப்படி ஒரு நல்ல மனசா! இவ்வளவு நல்லவங்களா என ஆச்சரியப்படும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று பார்த்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
சமீபகாலமாக விஜய் டிவியின் அடிமையாக மாறி விட்டார் ரம்யா பாண்டியன். தொடந்து ரம்யா பாண்டியனை மட்டும் வைத்து ஒவ்வொரு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.
சும்மா சொல்லக்கூடாது. ரம்யா பாண்டியன் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்த காரியம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ramya-pandian-cinemapettai
இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்வு அவரை பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாற்றும் அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இளம் வாலிபனாக வந்துள்ளவர் ஆஜித் என்ற பாடகர். இவருக்கு எவிக்ஷன் பிரீ பாஸ் என்ற சீட்டை அவருக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
அந்த பாடகர் ஆஜித் கூறிய காரணம் அவருக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததால் அவருக்கு விட்டுக் கொடுத்து விட்டாராம். இதனை பார்த்த ரசிகர்கள் எதார்த்தத்தின் ஏஞ்சல் எங்கள் ரம்யா பாண்டியன் என்று கொண்டாடி வருகிறார்கள்.
