சரோஜா தேவியாக மாறிய ரம்யா நம்பீசன் புகைப்படம்.. பத்து பொருத்தம் பக்காவா இருக்கு

மலையாள பட நடிகையான ரம்யா நம்பீசன் குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி என தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிகை மட்டுமல்லாமல் சில படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மஸ்டர்செப் நிகழ்ச்சியில் விருந்தினராக சென்றார் ரம்யா நம்பீசன். அவர் நடித்த என்றாவது ஒரு நாள் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ஒரு மகனுக்கு வயதான அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என பல பேட்டிகளில் அவர் கூறி உள்ளார். அதனால்தான் சேதுபதி படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

தற்போது சின்னத்திரை நடிகர் ரியோக்கு ஜோடியாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் பல படங்களில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய அழகை வெளிக்காட்டும் விதமாக விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இதனாலே அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

ramya-nambeesan-1
ramya-nambeesan-1

தற்போது சரோஜாதேவி கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் கருப்பு நிற பிளவுஸ் உடன் பச்சை நிற புடவை அணிந்து வெள்ளை நிற தோடு, வளையல், மோதிரம், மணிகள் போட்டு நாற்காலியில் அமர்ந்து சரோஜாதேவி போல் போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அந்த போட்டோவை பகிர்ந்து வருகிறார்கள்.

ramya-nambeesan-2
ramya-nambeesan-2