Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ப்ளூ பிலிம் பட நாயகி ரோலில் நடிப்பது யார் தெரியுமா ?
ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எடுத்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். மார்ச் 29 ரிலீசாகிறது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்கின், நீலன் கே சேகர் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார்.
பல கிளைக்கதைகள் கிளைமாக்சில் ஒரு இடத்தில் இணைவது போன்றா, அல்லது தனி தனி ஷார்ட் பிலிம் பாணியா என்று இப்படத்தின் மீது பலத்த ஆர்வம் எழுந்துள்ளது.

ramya-krishnan
ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தினைப் பற்றியும், தன்
நடிப்பு அனுபவம் பற்றியும் பேட்டி தந்தார். இப்படத்தில் “லீலா” என்ற மலையாள பிட்டு பட நடிகையாகவே ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். முதலில் நதியா நடிப்பதாக இருந்த ரோல் இது என்பது குறிபிடித்தக்கது.
ரம்யாகிருஷ்ணனின் ஒரு ஷாட் 37 ரி டேக் பெற்றதாம், அதுவும் இரண்டு நாட்களாக அந்த ஒரு ஷாட் தான் நடித்தாராம்.

super deluxe
சில படங்கள் பணத்துக்காக, சில பெயர் எடுக்க பிரபலம் அடைய, ஒரு சில படங்களே நமது ஆத்மார்த்தமான திருப்த்தி மற்றும் பாஷனுக்காக நடிப்போம். இது மூன்றாவது வகையை சேர்ந்த படம் என சொல்லி தன் பேட்டியை முடித்துள்ளார் “மல்லு அன்கட்” லீலா.
