படையப்பாவில் நீலாம்பரி கேரக்டர்க்கு இந்த நடிகையைத்தான் முதலில் கேட்டாங்களாம்.. எப்பாடா செம காமெடி ஆயிருக்கும்

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர் மற்றும் நடிகைகள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் மக்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர் அப்படி காலம் கடந்தும் வில்லியாக ரசிகர்களிடம் நிலைத்து நிற்பவர் தான் ரம்யா கிருஷ்ணன்.

ரம்யா கிருஷ்ணனின் வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமாகயிருப்பது படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்திற்கு எந்த அளவிற்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்ததோ அதே அளவிற்கு ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரமும் முக்கியத்துவம் உள்ளது போல் வடிவமைத்திருந்தார் கே எஸ் ரவிக்குமார்.

நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வானது ரம்யாகிருஷ்ணன் இல்லை என்றும் மேலும் மற்றொரு பிரபலம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னதாகவும் கூறியுள்ளார். எந்த எந்த பிரபலங்கள் தேர்வாகி இருந்தனர் மற்றும் வாய்ப்பு கொடுக்க சொன்னது யார் என்பதை பார்ப்போம்.

ramya krishnan rajinikanth
ramya krishnan rajinikanth

படையப்பா படத்தின் கதையை கேட்டுவிட்டு ரஜினிகாந்த் ஒன்லைன் ஆக இந்த படத்தில் ஒரு பெண்தான் வில்லியாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதைக்கேட்ட ரவிக்குமார் ஷாக் ஆனது மட்டுமில்லாமல் யாரை நடிக்க வைப்பது என சில நாட்கள் புலம்பியுள்ளார்.

முரட்டுத்தனமான வில்லி கதாபாத்திரம் என்பதால் முதலில் மீனாவிடம் அணுகி உள்ளனர். ஆனால் இந்த ரோல் அவர் செய்வாரா என யோசித்து பின்பு கைவிடப்பட்டது.
ஆனால் நட்புக்காக தெலுங்கு வெர்ஷனில் மீனா தான் சிம்ரன் கதாபாத்திரத்தில் கோபமாக நடித்திருப்பார். அதன்பின் சிம்ரனை இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அணுகியுள்ளனர். ஆனால் அப்போது சிம்ரன் மிகவும் பிசியாகயிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த கே எஸ் ரவிக்குமார் கடைசியாக ரம்யாகிருஷ்ணன் தேர்வு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது என பலரும் ரம்யா கிருஷ்ணனை புகழ்ந்து தள்ளினர்.

ரம்யா கிருஷ்ணனுக்கு பெயர் வாங்கிக்கொடுத்த கதாபாத்திரம்தான் நீலாம்பரி. தற்போது வரை ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்