Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகினியில் கவர்ச்சி காட்டிய ரம்யா கிருஷ்ணன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ramya-krishnan-cinemapettai

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருப்பார். அதேபோல் ஒரு சில குத்துப்பாடல்களிலும் ஆட்டம் போட்டுள்ளார். இருப்பினும் படையப்பா படத்தில் வில்லியாக நீலாம்பரி என்னும் கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். இன்றளவும் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதேபோல் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடிப்பில் மிரட்டி இருப்பார். நடிப்பில் ரம்யா கிருஷ்ணனை அடித்து கொள்ள ஆளே இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்து வருகிறார்.

ramya krishnan

ramya krishnan

இந்நிலையில், இவருடைய இளம் வயது காலத்தில் நடிக்க வந்த ஆரம்பத்தில் டூ பீஸ் பிகினி உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் நம்ம ராஜமாதாவா இது? பாகுபலி படத்தில் பார்த்ததற்கு நேர்மாறாக பிகினியில் உள்ளார் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Continue Reading
To Top