fbpx
Connect with us

Cinemapettai

முதல் காட்சி முதல் என்னை வச்சி செய்த இயக்குனர்.. ரம்யா கிருஷ்ணன் யாரை சொல்கிறார்

ramya-krishnan

News | செய்திகள்

முதல் காட்சி முதல் என்னை வச்சி செய்த இயக்குனர்.. ரம்யா கிருஷ்ணன் யாரை சொல்கிறார்

ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில்  நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தினைப் பற்றி பேட்டி அளித்தார்

நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில்  நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தினைப் பற்றி பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியது:

என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியதில்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. என் முதல் படத்தில் கூட இவ்வளவு டேக் வாங்கியதில்லை என்றவர் “முதலில் தியாகராஜன் குமாரராஜா என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார்.

அப்போது நான் மிகவும் கூலாக, என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், கண்டிப்பாக, முயற்சி செய்யலாம் என்று கூறினார்.

அப்போது என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. அதற்கு முன்பு விஜய் சேதுபதி என்னுடைய வேனுக்கு வந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார்.

அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் தெரிந்தது அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top