ஏற்கனவே ரஜினியுடன் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த படையப்பா படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதேபோல், பஞ்ச தந்திரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார் ரம்யாகிருஷ்ணன்.

இந்நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தில் ரம்யாகிருஷ்ணனும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  சவுதியில் சாதனை படைக்க போகும் ஒரே இந்திய திரைப்படம் 2.0!

இது தவிர கமல் இயக்கி நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்திலும் ரம்யாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கமலின் மனைவியாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  நம் கலாச்சாரம் வெறும் 70 வருடம் தான், 2000 வருடம் இல்லை- கமல்ஹாசன் அதிரடி பதில்

இந்த இரண்டு படங்கள் தவிர தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் அவரது வேடம் மிகவும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.