Connect with us
Cinemapettai

Cinemapettai

actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜோதிகா வாய்ப்பை பிடித்த ரம்யா கிருஷ்ணா.. வயசானாலும் கெத்து தான்!

மாஸ் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பை ரம்யா கிருஷ்ணனுக்கு ஜோதிகா தாரைவார்த்த சம்பவம்தான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

முன்னர் மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து பரபரவென முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா. பின்னர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிட்டார்.

குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவுக்கு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் எதிர்பார்த்ததை விட அளவுக்கதிகமான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகாவுக்கு படங்கள் சிறப்பாக அமைந்தாலும் வசூல் ரீதியாக ஒன்றும் பெருசாக அமையவில்லை. இந்நிலையில்தான் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதில் பிரபாஸுக்கு சகோதரி வேடமாம்.

ஆனால் ஜோதிகா அந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். கே ஜி எஃப் படத்தில் அம்மா கதாபாத்திரம் எப்படி பெயர் பெற்றதோ அதேபோன்ற பெயர் தான் இந்த கதாபாத்திரத்திற்கும் இருக்கிறது என இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் நோ சொல்லிவிட்டாராம்.

இதனால் அப்செட் ஆன இயக்குனர் பிரசாந்த் நீல், இருக்கிறதே இருக்கிறார் நம்ம ரம்யா கிருஷ்ணன் என அந்த பக்கம் சாய்ந்துவிட்டார். பாகுபலி படங்களுக்கு பிறகு ரம்யாகிருஷ்ணா மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ramya-krishnan-cinemapettai

ramya-krishnan-cinemapettai

Continue Reading
To Top