Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்ட ரியோ.. மூக்கை உடைத்த ரம்யா பாண்டியன்!

rio-bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்ட ரியோ.. மூக்கை உடைத்த ரம்யா பாண்டியன்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் 4 தற்போது இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சீசனின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது அனுதினமும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கும் அதனால் வீட்டினுள் ஏற்படும் சண்டையும் தான்.

இந்நிலையில் நேற்று குரூப்பிசம் பிரச்சினைக்கு முட்டுக்கட்டை போடுவதாக எண்ணி, ரியா போட்ட பிளானுக்கு ஆப்பு வைத்து ரியோவை ஆஃப் பண்ணினார் ரம்யா பாண்டியன். இந்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடு ‘குடும்பமா அல்லது  போட்டிகளமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த பட்டிமன்றத்தில் ‘குடும்பம் குடும்பமாகவே பிக்பாஸ் வீடு இருக்கிறது.. குடும்பமாக இல்லை’ என்று மறைமுகமாக குரூப்பிசத்தைப்பற்றி குத்தி காட்டினார் மொட்டை.

இதனால் குரூப்பிசம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எண்ணி, இந்த வார கேப்டனான ரியோ ஹவுஸ்மெட்ஸ் அனைவரையும்  டைனிங் டேபிளுக்கு பேச அழைத்தார்.

இதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆஜித் ஆகிய மூவரையும் ரியோ குறிப்பிட்டு பேசத் தொடங்கியதும், ரம்யா பாண்டியன் ரியோவிடம் கறாராக பேசியிருப்பது பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரையும்  வாயடைக்கச் செய்துள்ளது.

இதனால் வெறுப்பான ரியோ நக்கலாய், ‘தேங்க்யூ.. தேங்க்யூ சோ மச்’ என்றுகூறி ரம்யாவை பேசவிடாமல் தட்டிக்கழிக்க முயன்றார்.

மேலும் இதனை கழுகு போல் கவனித்த நெட்டிசன்கள், ‘ரம்யா பேச வேண்டிய இடத்தில் பக்காவா பேசி ஆப்போசிட் பார்டி யாராயிருந்தாலும் நாக்கவுட் பண்ணிடுறாங்க’ என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

rio-big-boss-kamal-1

rio-big-boss-kamal-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top