இயக்குனர் ராம்

படங்களின் எண்ணிக்கையை விட தரத்தின் மேல் அக்கறை கொண்ட நபர். வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான் இவரின் கூடுதல் பிளஸ். “தரமணி” படத்தை தொடர்ந்து ரிலீசாக ரெடியாக உள்ள படம் “பேரன்பு”. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது இப்படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்) மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வழக்கம் போல் யுவன் இசை.

Peranbu-

இப்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இயக்குனர் ராம் தன் பேஸ் புக் பதிவில் இதை தெரிவித்துள்ளார்.

47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World Premiere) ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டிப் பிரிவில் தேர்வாகியது.

தற்போது பேரன்பு திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆக சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) பேரன்பு திரையிடப்பட இருக்கிறது.

Peranbu

படம் முடிவடைந்ததும் World Premiere மற்றும் Asian Premiere-க்கு பிறகு பேரன்பை வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

பேரன்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கூடிய விரைவில் வெளி வர இருக்கிறது.

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
பேரன்போடு,
P L தேனப்பன் , ராம்.

தயாரிப்பாளர்: P L தேனப்பன் (ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்) எழுத்து-இயக்கம்: ராம் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் படத்தொகுப்பு: சூர்ய பிரதமன் கலை: குமார் கங்கப்பன் நடிகர்கள்: ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா, அஞ்சலி அமீர் மற்றும் பலர்.