Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது ராமின் பேரன்பு படத்தின் பர்ஸ்ட லுக் ப்ரோமோ வீடியோ 01 !
இயக்குனர் ராம்

Peranbu
படங்களின் எண்ணிக்கையை விட தரத்தின் மேல் அக்கறை கொண்ட நபர். வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான் இவரின் கூடுதல் பிளஸ். “தரமணி” படத்தை தொடர்ந்து ரிலீசாக ரெடியாக உள்ள படம் “பேரன்பு”. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது இப்படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்) மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வழக்கம் போல் யுவன் இசை.

Peranbu
இப்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ராம் இப்படத்தின் பார்ஸ்ட லுக் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Peranbu
8.30 மணிக்கும் வெளியாகும் என்று அறிவித்தனர். எனினும் சில டெக்கினிக்கல் குறைபாட்டால் ஒரு மணிநேரம் தாமதமாக வெளியாகும் என்றனர்.
Due to technical issues, first look release has been postponed by 1 hour. Sorry for the inconvenience.
— Peranbu (@PeranbuOfficial) July 8, 2018
தற்பொழுது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இசை மற்றும் டீஸர் வெளியீடு ஜூலை 15 மாலை வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
