பாலியல் குற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ரஹீமிடம் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தவான் உள்ளிட்டோர் பிரசன்னம் கேட்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சாமியார் என்றால் காவி உடையில் தான் இருக்க வேண்டும், சந்நியாச வாழ்வு தான் வாழ வேண்டும் என்பதை உடைத்தவர் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். கலர் கலர் சட்டையில் உலா வந்து இசை ஆல்பம், சினிமா, பிரசன்னம் என அறிவுரை வழங்கி வந்த குர்மீத் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் உள்ள பெண் பக்தர்களை புனிதப்படுத்துவதாகக் கூறி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 14 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே ராம் ரஹீம் குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்னதையடுத்து கலவரம் வெடித்ததையடுத்து அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வப்பட்டனர். இந்நிலையில் குர்மீத் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.