Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

உணர்ப்பூர்வமான அழகான திரைப்படம் – விஜய் சேதுபதியின் புதிய / பழைய படத்தை பார்த்த ராட்சசன் இயக்குனரின் ரியாக்ஷன் இது தான் .

இடம் பொருள் ஏவல்

இப்படத்தில் வரும் கதை எப்படி என நமக்கு தெரியாது, ஆனால் படம் உருவான கதை சுவாரசியமாக சினிமா போலவே இருக்கும்.

நீர்ப்பறவை முடிந்த பின், விமல் நடிப்பில் வாசன் விசுவல் தயாரிப்பில் பெங்களூர் தமிழன் என்ற அறிவிப்பு 2012 வந்தது. 13 இல் விஜய் சேதுபதியும் இணைந்தார். கொடைக்கானல் அருகில் ஷூட்டிங் என முடிவானது. பின்னர் விமலுக்கு பதிலாக அட்டகத்தி தினேஷ் நடிக்கிறார், தலைப்பு சொந்த ஊர் என மாறியது. அடுத்ததாக தயாரிப்பாளர் லிங்குசாமி எனவும், ரகுநந்தனுக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசை என முடிவானது. பின்னர் தலைப்பு இடம் பொருள் ஏவல் எனவரும் தினேஷுக்கு பதிலாக விஷ்ணு விஷால் கமிட் ஆனார்.

Vijay-Sethupathi-Seenu-Ramasamy14 இல் முதலில் ஹீரோயினாக மனிஷா யாதவ் ஷூட்டிங் ஆர்மபித்தார் , பின்னர் அவர் ரோலில் நந்திதா ஸ்வேதா மாற்றப்பட்டார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்தார். ராகுல் தருமன் (மதயானைக் கூட்டம்) ஒளிப்பதிவு செய்துள்ளார், மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

idam porul eval

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தும் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பணப்பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இதனை ஆண்டுகளாக கிடப்பில் தான் உள்ளது. பாடல்கள் மற்றும் டிரெய்லர் முன்பே வெளியானது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த ‘முண்டாசுப்பட்டி, ராட்சசன் இயக்குனர் ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top