கதாநாயகனாக நடிக்க இருந்த பிரபு அண்ணன் ராம்குமார்.. அதுவும் எந்த இயக்குனர் படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பேர்போன ஒரே நடிகர் சிவாஜி கணேசன். சினிமா உள்ளவரை இவரது புகழும் இருக்கும் அந்த அளவிற்கு சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளார். தற்போது வரை பல நடிகர்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் நடிப்புக்கு உதாரணமாக இருப்பவர் சிவாஜி கணேசன் என பல நடிகர்களும் கூறியுள்ளனர்.

இவரது மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்கினாலும் பிரபு பல படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். ஆனால் அவரது அண்ணனான ராம்குமார் ஒரு சில படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார்.

அறுவடை நாள், சந்திரமுகி மற்றும் ஐ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். ஆனால் இவருக்கும் முதலில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போயுள்ளது.

பாரதிராஜா இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மண்வாசனை. இப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிப்பதற்கு ராம்குமாரிதான் பேசப்பட்டது. அதற்கு அவரும் சம்மதித்துள்ளார். ஆனால் காலப்போக்கில் இருவரும் இணைய முடியாததால் பின்பு பாண்டியனை வைத்து பாரதிராஜா படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதன்பிறகு ராம்குமாருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மண்வாசனை படத்தில் ராம்குமார் கதாநாயகனாக நடித்திருந்தால் அதன்பிறகு இவரும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருப்பார் என பலரும் கூறியுள்ளனர்.

தற்போது சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறாராம். ராம்குமார் அவ்வப்போது ஒரு சில படங்களில் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்