Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் படத்தை வியாபாரத்தில் தோற்கடித்த ராம்கி படம்.. அப்படி என்ன இருக்கு அந்த படத்துல?
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை அதிக வியாபாரமுள்ள நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்துடன் போட்டி போட்ட பல நடிகர்கள் தற்போது தடம் தெரியாமல் காணாமல் போன நிலையில் இன்னமும் ரஜினிகாந்த் இளம் நடிகர்களுக்கு சவால் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம் ஒன்றின் வியாபாரத்தை விட இளம் நடிகர் ஒருவரின் வியாபாரம் அதிகமாக இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மனிதன். இந்த படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. வசூலிலும் சக்கை போடு போட்டது.

manithan-cinemapettai
மேலும் அனைத்து ஏரியாக்களிலும் இதுவரை வந்த படங்களை விட அதிக அளவு வியாபாரமான படமாகவும் மனிதன் கருதப்பட்டது.
ஆனால் அதன் பிறகு வெளிவந்த ராம்கி மற்றும் அருண்பாண்டியனின் இணைந்த கைகள் படம் குறிப்பிட்ட செங்கல்பட்டு ஏரியாவில் ரஜினி படத்தின் வியாபாரத்தை விட அதிகமாக இருந்ததாம்.

inaindha-kaikal-cinemapettai
இதனை இணைந்த கைகள் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். இணைந்த கைகள் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
