புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராம்கி, நிரோஷாவின் காதல் திருமணத்தில் வில்லியாக மாறிய ராதிகா.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த ராம்கிக்கு அதன்பிறகு சினிமா துறையில் பெரும் ரசிகர் வட்டாரம் உருவானது. இளைஞர்கள் அனைவரையும் தன் நடிப்பால் வசீகரம் செய்து வைத்திருந்தார் ராம்கி.

அப்போதெல்லாம் ராம்கியின் காலம் என்றே கூறலாம் அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் ராம்கியின் கொண்டாடி வந்தனர். அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் அணில் கபூர் என்று செல்லமாக அழைத்து வந்தனர்.

இவரது நடிப்பில் வெளியான செந்தூரப்பூவே படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து பின்பு இணைந்த கைகள் போன்ற படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி இடத்தை கொடுத்தது.

செந்தூரப்பூவே படத்திற்கு பிறகு தான் ராம்கி, நிரோஷா மோதல் காதலாக மாறியது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராம்கி. ஆனால் இவர்களது திருமணத்திற்கு குடும்பத்தார் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

nirosha family
nirosha family

செந்தூரப்பூவே சூட்டிங் ஸ்பாட் போது இரண்டு ரயில்களுக்கு இடையே மாட்டிக் கொண்டுள்ளார் நிரோஷா. அப்போது ராம்கி தைரியமாக நிரோஷா காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம். ராம்கி மற்றும் நிரோஷாவின் காதல் நிரோஷாவின் உறவினரான ராதிகா மற்றும் ராதாரவி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நம்முடைய குடும்ப தகுதிக்கு நீ அவரை திருமணம் செய்யக்கூடாது என கூறியது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க இருந்த இணைந்த கைகள் படத்தில் ராம்கிக்கு பதிலாக அருண் பாண்டியனுக்கு ஜோடியாக நிரோஷாவை நடிக்க வைத்துள்ளனர்.

அவர்கள் காதலுக்கு ராதிகா மற்றும் ராதாரவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பின்பு ஒரு சில மாதங்கள் நிரோஷாவை வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளனர். காதலில் எதிர்ப்புகள் இருந்தாலும் கல்யாணம் வரை ராம்கி மற்றும் நிரோஷா லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிரோஷா ராம்கி தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார். பின்பு கல்யாண ஏற்பாடு நடைபெற்றும் இரு வீட்டார் சண்டை காரணமாக நின்று உள்ளது. சில வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் வீட்டில் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

Trending News