உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார். சசிகலா என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

https://twitter.com/RGVzoomin/status/832301469537701888

ஜெயலலிதா, சசிகலா இடையேயான உறவு குறித்த உண்மையை போயஸ் கார்டன் பணியாட்கள் என்னிடம் கூறியது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. அதை என் படத்தில் காட்டுவேன்.

https://twitter.com/RGVzoomin/status/832298555553353728

சசிகலா படம் சசிகலாவின் பின்னால் மற்றும் முன்னால் இருக்கும் கதையை காட்டும். இதை மன்னார்குடி மாபியா உறுப்பினர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

https://twitter.com/RGVzoomin/status/832297310692315136

மன்னார்குடி மாபியா குடும்பத்தின் டான் விடோ சசிகலா கார்லியோனி…இதை அவர் மறுக்கக் கூட மாட்டார்.

https://twitter.com/RGVzoomin/status/832299236267941889

ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா இருக்கும் சிறை அறக்கு வரும் என்று எனக்கு தோன்றுகிறது என்று ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.