Connect with us
Cinemapettai

Cinemapettai

சசிகலாவின் பயோபிக்கை இயக்கும் சர்ச்சை இயக்குனர்.. முக்கியமான கதாபாத்திரத்தில் சூரரைப்போற்று பிரபலம்

sasikala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிகலாவின் பயோபிக்கை இயக்கும் சர்ச்சை இயக்குனர்.. முக்கியமான கதாபாத்திரத்தில் சூரரைப்போற்று பிரபலம்

தமிழ்நாடு அரசியலில் இரு துருவங்களாக பார்க்கப்பட்டது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி. இதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்காக இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே தலைவி இப்படத்தை இயக்குனர் விஜய் முடித்து வெளிவருவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி மிக நடித்துள்ளாராம்.

தற்போது சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா சசிகலாவை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளாராம். அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஏற்கனவே ராதிகாவிடம் உறுதி செய்து விட்டதாகவும்.

radhika

radhika

சசிகலாவின் கதாபாத்திரத்திற்கு ஊர்வசியை நடிக்க வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை மையமாக வைத்து பல உண்மைகளை வெளிக்கொண்டுவர விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

oorvasi-mookuthi-amman

oorvasi-mookuthi-amman

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளதாம், வரும் மார்ச் மாதத்தில் படம் வெளியாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது தேர்தலுக்கு முன்னதாகவே இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சசிகலா வரும் ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இந்த படம் வெளிவந்தால் சசிகலாவுக்கு தேர்தலை ஒட்டி பெரும் பின்னடைவு ஏற்படும். ஏனென்றால் சசிகலாவை கிண்டலடிக்கும் விதமாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பவன் கல்யாண் போன்ற பல பிரபலங்களை மறைமுகமாக தாக்கி படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top